Payload Logo
தமிழ்நாடு

ஆளுநர் விருதுகள்: சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 2 பிரிவுகளில் விண்ணப்பிக்கலாம்.!

Author

Bala

Date Published

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ”ஆளுநர் விருதுகள்” 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவுகளில் ஆளுநர் விருதுகள்-2025′ க்கு விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 14 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 2 பிரிவுகளிலும் தலா 4 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசளிக்கப்படுகிறது.

விண்ணப்பங்கள் தலைசிறந்த நிபுணர்கள் அடங்கிய குழுவால் பரிசீலிக்கப்படும்.  சமூக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய 2 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. தொண்டு நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம், விருது, தனி நபர் பிரிவில் ரூ.2 லட்சம், விருது வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு குடியரசு தினத்தன்று ஆளுநர் ஆர்.என்.ரவி விருதுகளை வழங்குவார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ‘சமூக சேவை’ மற்றும் ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’ ஆகிய இரண்டு பிரிவுகளில் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பதற்கும் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரிக்க இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இணையதளத்தில் (https://tnrajbhavan.gov.in/) வெளியிடப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் [email protected] பூர்த்தி குறிப்பிட்ட கால நேரத்திற்குள் மென் நகலை அனுப்பிவைக்கவேண்டும். மேலும், துணை ஆவணங்களுடன் விண்ணப்பத்தின் வன் நகலை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.