அஜித் ரசிகர்களுக்கு நாளை இரவு விருந்து... 'குட் பேட் அக்லி' டீசர் அப்டேட்.!
Author
gowtham
Date Published

சென்னை :இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு 7.03 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு அஜித் நடித்துள்ள இரண்டு படங்களில் ஒன்றான நடிகர் 'விடாமுயற்சி' திரைப்படம் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது ரசிகர்களின் கவனம் 'குட் பேட் அக்லி' படத்திற்கு திரும்பியுள்ளது. 'விடாமுயற்சி' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை, இதனால் குட் பேட் அக்லி படம் நிச்சயம் வெற்றி பெரும் என்று அனைவரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.
சமீபத்தில், படத்தில் கதாநாயகியாக நடிக்கும் த்ரிஷாவின் தோற்றம் மற்றும் கதாபாத்திரப் பெயர் வெளியிடப்பட்டது. இது அனைவரது ஆர்வத்தையும் மேலும் அதிகரித்தது. இந்த நிலையில், நாளை இரவு அஜித் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டமாக குட் பேட் அக்லி டீசர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeமேலும், இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ, கேஜிஎஃப் புகழ் பிஎஸ் அவினாஷ் , பிரபு, பிரசன்னா, ராகுல் தேவ், யோகி பாபு மற்றும் சுனில் ஆகியோரும் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு, ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.