வார தொடக்க நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு.!
Author
gowtham
Date Published

சென்னை :தங்கத்தின் விலை இன்று (பிப்.17) மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்த நிலையில், இன்று ஒரே நாளில் விலை அதிகரித்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலைகிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒருகிராம் ரூ.7,940க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது.
[caption id="attachment_954435" align="aligncenter" width="902"]gold price today [File Image][/caption]அதைப்போல, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,667-க்கும், ஒரு சவரன் ரூ. 69,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், ஒரு கிலோரூ.1,08,000க்கும் விற்கப்படுகிறது.