Payload Logo
Untitled category

சற்று ஆறுதல் அளிக்கும் தங்கம் விலை... இன்று சவரனுக்கு ரூ.360 குறைவு!

Author

gowtham

Date Published

gold price

சென்னை :ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.21) கிராமுக்கு ரூ.45 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்திருந்த தங்கம் இன்று திடீரென சரிவைக் கண்டுள்ளது கவனிக்கத்தக்கது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,025 க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.64,200க்கு விற்பனையாகிறது.

[caption id="attachment_954874" align="aligncenter" width="832"]today gold rate [File Image][/caption]அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.109க்கு விற்பனையாகிறது.

மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.8,754-க்கும், ஒரு சவரன் ரூ.70,032-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.