Payload Logo
Untitled category

தங்கம் விலை ரூ.59,000ஐ நெருங்கியது... இன்றைய விலை நிலவரம் என்ன?

Author

gowtham

Date Published

gold rate

சென்னை:பொங்கல் பரிசாக பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து சவரனுக்கு ரூ.59,000ஐ நெருங்கியது.

சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.7,315க்கு விற்கப்பட்டது. 1 சவரன் தங்கம் ரூ.58,520க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று 1 கிராம் தங்கம் ரூ.25 அதிகரித்து, ரூ.7,340ஆக விற்கப்படுகிறது. இதேபோல், 1 சவரன் தங்கம் விலை ரூ.200 உயர்ந்து, ரூ.58,720ஆக விற்பனை செய்யப்படுகிறது.

[caption id="attachment_950938" align="aligncenter" width="1260"]

gold price

gold price [File Image ][/caption]அதே நேரம், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,007-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.64,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், 1 கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ.102ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.1,000 அதிகரித்து ரூ.1,02,000ஆகவும் விற்கப்படுகிறது