Payload Logo
சினிமா

மாஸ் டயலாக், அனல் பறக்கும் ஆக்சன் காட்சிகள்.. கவனம் "கேம் சேஞ்சர்" டிரைலர்.!

Author

gowtham

Date Published

Game Changer Trailer

சென்னை:இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில், ராம் சரண் அப்பா மற்றும் மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.

ராம் சரண் தவிர படத்தில் கியாரா அத்வானி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இதில் எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர். அரசியல் கலந்த ஆக்சன் நிறைந்த இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ட்ரைலரை  இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர்.

படத்தின் ட்ரைலர் வெளியிடும் நிகழ்ச்சி ஹைதராபாத் ஏஎம்பி மாலில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ராஜமௌலி கலந்து கொண்டு ட்ரைலரை வெளியிட்டார். மேலும் இதில் படத்தின் முன்னணி நட்சத்திரங்கள் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

ட்ரைலரை வைத்து பார்க்கையில், படத்தில் சரண் ஒரு நேர்மையான அதிகாரத்துவவாதியாகவும், மற்றொன்றில் ஊக்கமளிக்கும் சமூக சீர்திருத்தவாதியாகவும் நடித்திருக்கிறார் போல் தெரிகிறது. சொல்லப்போனால், ட்ரெய்லரில் மாஸ் எலிமெடி, காமெடி என அனைத்தும் கலந்திருக்கிறது.

unknown node