Payload Logo
தமிழ்நாடு

LIVE : மும்மொழி கொள்கை விவகாரம் முதல்! "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் வரை!

Author

bala

Date Published

DMKProtest

சென்னை :தமிழ்நாட்டுக்கு தேவையான கல்வி நிதியை விடுவிக்காதது, மும்மொழிக்கொள்கை திணிப்பு ஆகியவற்றை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாலை 4 மணிக்கு நடைபெறும் போராட்டத்தில் பலரும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

அதைப்போல, பள்ளி, கல்லூரி மாணவிகள், சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து இன்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதன்படி, அதிமுக மாணவர் அணியின் சார்பில் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.