Payload Logo
தமிழ்நாடு

Live : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்..ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் வரை!

Author

bala

Date Published

live update

சென்னை :இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதிமுக உறுப்பினர்கள், திமுக உறுப்பினர்கள், என பலரும் பேரவை வளாகத்திற்கு வருகை தந்துள்ளனர். சட்டப்பேரவைக்கு வருகை தரவுள்ள ஆளுநர் ரவி தனது உரையை முதலில் ஆங்கிலத்தில் படிப்பார். அதை தொடர்ந்து அதன் தமிழ் மொழியாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசிப்பார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1000 வழங்கப்படாததற்கான சர்ச்சையும் சட்டப்பேரவையில் முக்கியமாக பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைத்துறையில் இசை புயல் என ரசிகர்கள் அன்புடன் அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தன்னுடைய 58-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் பலரும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.