LIVE : தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்... 2வது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம் வரை!
Author
gowtham
Date Published

சென்னை :முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் ஏற்கனவே இறுதி செய்யப்பட்ட நிலையில், கூடுதல் அம்சங்கள் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேற்றப்படாதவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக இன்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் ஒருநாளைக்கு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இழந்து, 10,000-க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்திக் கொடுக்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்து இந்தற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.