Payload Logo
கிரிக்கெட்

இனிமே நான் இந்தியா ரசிகன்...பாகிஸ்தான் ரசிகரின் அதிர்ச்சி செயல்..வைரலாகும் வீடியோ!

Author

bala

Date Published

IND vs PAK

துபாய் :கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த இந்தியா - பாகிஸ்தான் இரண்டு அணிகளும் மோதிய சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலியின் அதிரடி சதம் காரணமாக இந்திய அணி வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

அடுத்ததாக, களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஆட்டமிழந்தாலும் அடுத்ததாக வந்த விராட் கோலி அணியை தன்னுடைய தொழில் சுமந்து கொண்டு சென்றார் என்று தான் சொல்லவேண்டும். கடைசி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்று சரியாக 100 ரன்கள் விளாசி அணியை வெற்றிபெற வைத்தார்.

அவருடைய அந்த அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி பேட்டிங் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து அனைவருடைய கவனத்தை ஈர்த்தது போல பாகிஸ்தான் ரசிகராக கூறப்படும் ஒருவர் செய்த சம்பவம் தொடர்பான வீடியோவும் தீயாக பரவி வருகிறது.

வைரலாக பரவி வரும் அந்த வீடியோவில் பாகிஸ்தான் ஜெர்சி அணிந்துகொண்டு பல ரசிகர்கள் கிரிக்கெட் பார்த்து கொண்டிருப்பதை காணலாம். பிறகு திடீரென அந்த ரசிகர் தனது கையில் வைத்திருந்த இந்திய அணியின் ஜெர்சியை எடுத்து போட்டுக்கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கை தட்டினாலும் ஒரு சில அதிர்ச்சியடைந்து என்ன இப்படி செய்கிறார் என்பது போல பார்த்தார்.

வைரலாகி வரும் இந்த வீடியோ உண்மையாகவே அவர் செய்யும்போது எடுக்கப்பட்ட வீடியோவா? அல்லது ரீல்ஸ்காக எடுக்கப்பட்டதா? என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை. இருப்பினும் வீடியோ வைரலாகி வரும் சூழலில் வீடியோ பார்த்த பலரும் விராட் கோலி பேட்டிங் பார்த்து அவர் இந்தியா ரசிகராக மாறிவிட்டார் என கூறி வருகிறார்கள்.

unknown node