Payload Logo
தொழில்நுட்பம்

இனிமேல் வாட்சப் பேமெண்ட் வசதி அனைவரும் பயன்படுத்தலாம்! தேசிய கார்ப்பரேஷன் அனுமதி!

Author

bala

Date Published

whatsapp payment

சென்னை :இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிஜிட்டல் பேமெண்ட் வசதிகளை இன்னுமே மக்கள் அதிகமாக பயன்படுத்தவேண்டும் என்பதற்காக வாட்சப்  நிறுவனம் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அது என்னவென்றால், எண்ணிக்கை இல்லாமல் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் வாட்சப் பேமெண்ட் வசதியை பயன்படுத்தி கொள்ளும் வசதிக்கு அனுமதி கேட்டு தேசிய கார்ப்பரேஷனுக்கு நோட்டிஸ் அனுப்பி இருந்தது.

இதற்கு முன்னதாக, இந்தியா முழுவதும் 10 கோடி பயனர்களுக்கு மட்டுமே பயன்பாடு செய்ய அனுமதிக்கப்பட்டது.ஆனால், அதன்பிறகு இப்போது வாட்சப் பேமெண்ட் வசதி பயன்பாடு அதிகமான காரணத்தால் அதனை கருத்தில் கொண்டு எண்ணிக்கை இல்லாமல் எவ்வளவு பேர் வேண்டுமானாலும் வாட்சப் பேமெண்ட் வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதற்கான வேண்டுகோளை  தேசிய கார்ப்பரேசன் பரீசிலினை செய்துள்ளது.

எனவே, இந்த  2025 முதல் இனிமேல் WHATSAPP வைத்திருக்கும் அனைவரும் இனி பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். இதன் மூலம், டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடு அதிகமாகும் என்பதால் தேசிய கார்ப்பரேசன் இதற்கு அனுமதி தந்துள்ளது.

மேலும், வாட்சப் பேமெண்ட்  மூலம் பணம் அனுபவத்தில் சில வசதிகள் கூட பயனர்களுக்கு கிடைக்கிறது. குறிப்பாக, ஒரு வங்கிக்கணக்கு நம்பருக்கு பணம் அனுப்பவேண்டும் என்றால் அவர்களுடைய மொபைல் எண் மூலம் நேரடியாக பணம் அனுப்பலாம். அதைப்போல, கடைகள் வைத்திருப்பவர்கள் வியாபாரிகள் QR கோடு மூலம் பணம் பெறலாம்.

மற்ற சில டிஜிட்டல் பேமெண்ட் வசதிகள் பயன்படுத்தும் போது அதற்கு கண்டனங்கள் பறிக்கப்படும். ஆனால், வாட்சப் பேமெண்ட் மூலம் பணம் செலுத்தினால்  எந்த விதமான சேவை கட்டணமும் இல்லை. எனவே, இதன் காரணமாகவும் இதற்கான பயன்பாடு அதிகரித்துக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.