பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் - பிரான்ஸ் அறிவிப்பு.!
Author
gowtham
Date Published

பாரிஸ் :பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு 2025 செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் உறுதிப்படுத்தப்படும் எனக் கூறியுள்ளார். இது இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர இம்முடிவு வழிவகுக்கும் என அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு மெக்ரான் கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார், இது குறித்து பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு மேக்ரான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''காஸாவில் மனிதாபிமான நெருக்கடி மற்றும் போர் நிலவிவரும் சூழலில், இரு தேசத் தீர்வை (இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தனித் தனி சுதந்திர நாடுகளாக் செயல்படுவது) முன்னெடுத்துச் செல்லும் வகையில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஆனால், இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை கோபப்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் பிரான்சின் முடிவுக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்டோபர் 7 (2023) அன்று இஸ்ரேலிய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு அவமானம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
மேலும், பிரான்சின் முடிவை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விமர்சித்துள்ளார். இது அமைதி முன்னெடுப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்று அவர் கூறினார்.