சென்னையில் ‘FICCI MEBC – South Connect 2025’! தொடங்கி வைக்கும் துணை முதல்வர் உதயநிதி!
Author
bala
Date Published

சென்னை :இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாட்டில், 'FICCI மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ் கான்க்ளேவ் (MEBC) – சவுத் கனெக்ட் 2025' மாநாடு இன்று, பிப்ரவரி 21, 2025, சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் தொடங்குகிறது. (பிப் 21-22) இரண்டு நாள் நடைபெறும் இந்நிகழ்வை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு தொடங்கி வைக்கஉள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் தலைமை வழிகாட்டியாக பங்கேற்கிறார்.
மாநாட்டின் முக்கிய அம்சம்இந்த மாநாட்டில் தொலைக்காட்சி, ஓடிடி, கேமிங், அனிமேஷன், டிஜிட்டல் மீடியா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு துறைகளின் வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள், முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை பற்றி விவாதிக்கபடவுள்ளது. ‘PlayNext’ எனும் தலைப்பில் கேமிங் மற்றும் மின் விளையாட்டு (e-sports) பற்றிய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
மேற்கண்ட தலைப்புகளில் முக்கியமானவர்கள் பேசவிருக்கிறார்கள்.
தொழில்நோக்கில் முக்கிய சந்திப்புஃபிக்கி (FICCI) ஏற்பாட்டில் நடைபெறும் இந்த மாநாடு, தென்னிந்திய பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும் வகையில், தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், கொள்கை அமைப்பாளர்கள், உள்ளடக்க உருவாக்குநர்கள் எனப் பல முக்கிய பிரமுகர்களை ஒன்றிணைக்கும் மாநாடாக இது இருக்கிறது. இந்த இரண்டு நாள் மாநாட்டில் உழைப்பாளர்களுக்கான பட்டறைகள், கலந்துரையாடல்கள், தொழில் வளர்ச்சி சந்திப்புகள் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறுகின்றன.
மாநாட்டில் கலந்துகொள்ளும் முக்கிய நபர்கள்இந்த மாநாட்டில் FICCI M&E Committee மற்றும் FICCI Tamil Nadu State Council ஆகியவற்றின் தலைவர்கள் உட்பட, முன்னணி நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள்.
பதிவு செய்ய வேண்டிய விவரங்கள்பதிவுக் கட்டணம்:
பொது விருந்தினர்கள் – ரூ.4,000 + 18% GST = ரூ.4,720 FICCI Corporate உறுப்பினர்கள் – 25% தள்ளுபடி FICCI Associate உறுப்பினர்கள் – 10% தள்ளுபடி Film Chamber உறுப்பினர்கள் – 50% தள்ளுபடி
பதிவு செய்ய:இந்திய பொழுதுபோக்கு மற்றும் மீடியா துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்ற இருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் வாய்ப்பை தவறவிடாதீர்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமானஇணையதளத்திற்கு சென்று டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம்.