Payload Logo
தமிழ்நாடு

ஆளுங்கட்சியாக இருந்தாலும் அனுமதி இல்லாமல் போராடினால் வழக்குப்பதிவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Author

bala

Date Published

mk stalin about Demonstration

சென்னை :தமிழக சட்டப்பேரவையில் 3-ம் நாள் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றயை நாளில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கி இருக்கிறது.  அண்ணா பல்கலை., மாணவி விவகாரத்தில் ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் எனசென்னை அண்ணாபல்கலை கழக விவகாரத்தில் அதிமுக, பாமா, நாதக உள்ளிட்ட காட்சிகள் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கூறி தொடர்ச்சியாக கைது செய்ப்பட்ட சம்பவம் பேசுபொருளாக மாறிய நிலையில், அது குறித்து சட்டப்பேரவையில் பாமகவினர் கைது குறித்து ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய மு.க.ஸ்டாலின் " அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தினால் யார் மீது வேண்டுமானாலும் வழக்கு பதிவு செய்யப்படும். அப்படி திமுகவினர் சிலர் செய்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் அனுமதி பெற்று போராட்டங்கள் நடைபெறுகிறது. எனவே, போராட்டம் நடத்தவேண்டும் என்றால் அதற்கான முன் அனுமதி பெறவேண்டும்.

போராட்டம் நடத்துவதற்கு இடம் இருக்கிறது எனவே முன் அனுமதிபெற்று விட்டு அங்கு சென்று போராட்டம் நடத்தலாம். இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியவர்கள் மீது மட்டும் தான். திடீரென உரிய அனுமதி வாங்காமல் போராட்டங்களில் ஈடுபடுவதன் காரணமாக தான் வழக்கு போடப்படுகிறது.

திமுக சார்பில் நேற்று பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருக்கிறது. ஆளும் கட்சியாக இருந்தாலும் கூட அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்" எனவும் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.