Payload Logo
தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல் : இன்று முதல் வேட்புமனு தாக்கல்!

Author

bala

Date Published

erode by election 2025

ஈரோடு :காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த தேதியில் தேர்தல் நடைபெறும் என்பது பற்றிய விவரத்தையும் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. அதன்படி வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அங்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 17ஆம் தேதி வரையில் தேர்தலில் போட்டியிடவேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் பெறப்படும் என்றும், ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் என்றும், ஜனவரி 20 ஆம் தேதி வேட்புமனு வாபஸ் பெற கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 5-ல் வாக்குப்பதிவு, பிப்ரவரி 8-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், இன்று முதல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல்  தொடங்குகிறது. எனவே, தேர்தலில் போட்டியிடுபவர்கள் இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம். , ஜனவரி 18இல் வேட்புமனு பரிசீலனை நடைபெறும் அது வரை வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 433 வாக்காளர்கள் உள்ளனர். அதில், ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 636 பேர். பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 760 பேர். இருபாலினத்தவர்கள் 37 பேர். இதர வாக்காளர்கள் 1570 பேர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.