Payload Logo
கிரிக்கெட்

4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!

Author

gowtham

Date Published

INDvsENG

மான்செஸ்டர் :இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் (வியாழக்கிழமை) ஆட்ட நேர முடிவில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.

ஆட்ட நேர முடிவில், ஓலி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தற்போது, இங்கிலாந்து அணி இந்தியாவை விட 133 ரன்கள் பின்தங்கியுள்ளது. மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையடுத்து பேட்டிங் தொடங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் (94 ரன்கள்) மற்றும் ஸாக் கிரௌலி (84 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 166 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருப்பினும், இருவரும் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர்.

அதை ரவீந்திர ஜடேஜா முறியடித்தார், அவர் குரோலியை விக்கெட் எடுத்து பெவிலினுக்கு அனுப்பினார். 113 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உதவியுடன் 84 ரன்கள் எடுத்த பிறகு அவர் ஆட்டமிழந்தார்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸில் சாய் சுதர்ஷன் (61), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (58), ரிஷப் பண்ட் (54) மற்றும் கே.எல். ராகுல் (46) ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர். இங்கிலாந்து பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியாம் டாவ்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.