Payload Logo
தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியில்லை! இபிஎஸ் அதிரடி அறிவிப்பு! 

Author

manikandan

Date Published

Erode By Election - ADMK Not Participate

சென்னை :இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதில்,  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்ற முக்கிய முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. இதனை எடப்பாடி பழனிச்சாமி தற்போது அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலானது வரும் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்று முதல் பெறப்பட்டு வருகிறது. 2021 பொதுத்தேர்தல் மற்றும் 2023 இடைத்தேர்தல் ஆகியவற்றில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில் இந்த முறை திமுக நேரடியாக களம் காண்கிறது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிட உள்ளார் .