Payload Logo
தமிழ்நாடு

மக்களே கவனம்!! சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து.!

Author

gowtham

Date Published

chennai water supply

சென்னை :சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 7 மண்டலங்களில் ஜூலை 30ம் தேதி முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு ஆகிய பகுதிகளில் விநியோகம் நிறுத்தப்படும். ஆனால், தாம்பரம் மாநகராட்சியின் கீழ் வரும் சில பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த மூன்று நாட்களில் தாம்பரம் மாநகராட்சியின் சில பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். மக்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும்.

காரணம் :செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வரும் பிரதான குழாயை, மற்றொரு குழாயுடன் இணைக்கும் பணி நடைபெற இருப்பதால் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.