Payload Logo
Untitled category

தினமும் இந்த கஞ்சியை ஒரு கப் குடிச்சா வலி மாத்திரையெல்லாம் தூக்கி போட்டுருவீங்க..!

Author

k palaniammal

Date Published

உளுந்து கஞ்சி

உடலுக்கு வலிமை தரும் இந்திய பயிர்களில் உளுந்து முக்கியமானதாகும். இந்த உளுந்தை வைத்து களி, இட்லி மாவு, வடை போன்ற உணவுகள் செய்ய பயன்படுகிறது. ஆனால் கை கால் வலி மற்றும் முதுகு வலி போன்றவற்றைப் போக்க கஞ்சி எவ்வாறு செய்வது என்று இப்பதிவில் பார்ப்போம் .

தேவையான பொருட்கள்

செய்முறைஉளுந்து மற்றும் அரிசியை தனித்தனியாக அரைத்து அதை மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும் பிறகு குக்கரில் ஒரு கப் அரைத்து வைத்துள்ள உளுந்து மற்றும் அரிசிக்கு நான்கு கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து பூண்டு, தேவையான அளவு, உப்பு பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து மூன்று விசில் வரும் வரை விடவும். பின்பு விசில் இறங்கியதும் தேங்காய் பாலை சேர்த்து கிளறி உங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.இப்போது எலும்புக்கு வலு சேர்க்கும் உளுந்து கஞ்சி தயார் .

உளுந்தின் பயன்கள்வெள்ளை உளுந்து விட கருப்பு உளுந்தின் தோலில் தான் கால்சியமும் பாஸ்பரஸும் சம அளவு உள்ளது. இது இடுப்பு எலும்பை நல்ல வலுவாக்குகிறது. கர்ப்பப்பை இருக்கு நல்ல வலுவை கொடுக்கிறது. முந்தைய காலத்து பெண்களின்  இடுப்பு எலும்பு மிக வலிமையாக இருந்தது என்றால் அதற்கு காரணம் அவர்கள் உணவில் அதிக அளவு உளுந்தை பயன்படுத்தினார்கள் என்பதே ஆகும்.

தவிர்க்க வேண்டியவர்கள்செரிமான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் வாயு தொந்தரவு இருப்பவர்கள் மிகக் குறைவான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

யூரிக் ஆசிட் அதிகம் உள்ளவர்கள், சிறுநீர் கற்கள் உள்ளவர்கள், கீழ்வாதம் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

ஆகவே முதுகு வலி உள்ளவர்கள் மற்றும் கை கால் வலி உள்ளவர்கள் இதைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும்.