இரவில் வந்தது கனவு : தவெகவில் இணைய விருப்பம் தெரிவிக்கும் நடிகர் பார்த்திபன்.?
Author
gowtham
Date Published

சென்னை :நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தவெக தலைவர் விஜய் தனது கனவில் வந்ததாக சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், அதில் ஓராண்டை தாண்டயது. விஜய் அரசியலில் முழுமையாக இறங்கி, தனது அடுதடுத்த நகர்வுகளும் ஒட்டுமொத்த அரசியல் களமும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்.
இந்நிலையில், விஜய் அரசியல் கட்சி துவங்கியது குறித்து மீடியாக்கள் பேசுவதை தாண்டி, நடிகர் நடிகைகளும் தங்களது கருத்துக்களை பாஸிடிவாக கூறுவது மற்றுமின்றி, விஜய்க்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் விஜய் அரசியல் பயணம் குறித்து கனவு ஒன்றை கண்டுள்ளார்.
அது பற்றி பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில், தனது தனித்துவமான ஸ்டைலில் அந்த பதிவை போட்டுள்ளார். அவரின் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அந்த பதிவில், "நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல், பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்…அது கனவு..
ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள்… இப்படி சில பல காரணமாக இருக்கலாம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் கட்சியில் சேருவதற்கு முதல் படியை வைத்திருப்பதாகவும், தவெகவில் இணைய விருப்பம் தெரிவிப்பதாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
unknown node