Payload Logo
தமிழ்நாடு

”அரசியல் கேள்வி கேட்க வேண்டாம்” சட்டென முகம் மாறி காட்டமாக பேசிய ரஜினிகாந்த்ஜினிகாந்!

Author

gowtham

Date Published

Rajinikanth

சென்னை:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, இப்படத்தின் பெரும்பகுதி அண்மையில் சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் முடிக்கப்பட்டது.

இந்த நிலையில், கூலி படத்திற்காக ரஜினிகாந்த் சென்னையில் இருந்து தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். இதையொட்டி, சென்னை விமான நிலையம் சென்ற அவரிடம் தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என ஆல்ரெடி சொல்லிருக்கேன்" ஓகே, தேங்க்யூ என்று காட்டமாக கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

மேலும், கூலி படத்தின் படப்பிடிப்பு 70% நிறைவடைந்துவிட்டதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஜன.13ல் தொடங்க உள்ளதாகவும், ஜனவரி 28 வரை கூலி படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, கூட்டத்தில் ரசிகர் ஒருவர் தலைவா..தலைவா... என்று கத்தியதற்கு தனது வாயில் விரலை வைத்து அமைதி என்று சுட்டி காட்டினார்.

unknown node