Payload Logo
Untitled category

இரவு 8 மணிக்கு மேல் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்குமா?

Author

sharmi

Date Published

weight loss dinner

இரவில் எட்டு மணிக்கு பிறகு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்குமா என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நிபுணர்களின் கருத்துப்படி, இரவு உணவு அவசியமானது. அதேசமயம் இரவில் 8 மணிக்கு பிறகு உணவு சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்ற கருத்து சிலரிடம் இருந்து வருகிறது. இரவு உணவை பொறுத்தவரை நீங்கள் எந்த நேரத்திற்கு சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. சாப்பிட்ட நேரத்திற்கு பிறகு தகுந்த காலதாமதத்துடன் தூங்குவது அவசியமான ஒன்று. ஆனால் நீங்கள் சாப்பிடும் சாப்பாடு கனமான சாப்பாடா, அதிக கலோரி நிறைந்த சாப்பாடா, அல்லது பாஸ்ட் ஃபுட்-ஆ என்பதை பொறுத்தே உடல் எடை அதிகரிக்கும்.

இதை தவிர நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டின் நேரம் பொறுத்து உங்கள் எடை அதிகரிப்பதில்லை.  வறுத்த உணவுகள், இனிப்பு பலகாரம், கலோரி அதிகம் நிறைந்த உணவுகள், ஜங்க் ஃபுட், ஐஸ்கிரீம், நொறுக்கு தீனி போன்றவை உடல் எடையை அதிகரிக்கும். அதனால் இரவில் லேசான உணவுகளை எடுத்து கொள்வதனால் உடல் எடை அதிகரிக்க வாய்ப்பில்லை. மேலும், தினசரி கலோரிகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு உணவு உட்கொள்வது சிறப்பு. இதனால் உங்களுக்கு உடல் பருமன் அதிகரிக்காது.