Payload Logo
லைஃப்ஸ்டைல்

உடல் எடையை குறைக்க விரும்புகிறீர்களா..?அப்போ இந்த ஒரு பொருளே போதுமானது..!

Author

leena

Date Published

Red chilly

சிவப்பு மிளகாய் உடல் எடையை குறைக்கிறது.

பொதுவாக நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உடல் எடை அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதை குறைக்க வேண்டும் என்று தான் விரும்பும் விரும்புவதுண்டு. அதற்காக நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதற்கு காரணம் நாம் அனைவரும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால் தான். தற்போது இந்த பதிவில் சிவப்பு மிளகாய் நமது உடல் எடையை எவ்வாறு குறைகிறது என்பது பற்றி பார்ப்போம்.

சிவப்பு மிளகாய்

அதாவது ஆராய்ச்சியின் படி, சிவப்பு மிளகாய் நமது உடலில் உள்ள கலோரிகளை எரிக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவில் சிவப்பு மிளகாயை சேர்த்துக் கொள்ளும் போது, இது நமது உடல் எடையை குறைக்கிறது.

ஒரு ஆய்வின்படி, மிளகாயை உணவில் சேர்த்து உட்கொண்டவர்கள் சாப்பிட்டு 30 நிமிடங்களுக்கு பிறகு அவர்களிடம் வளர்சிதை மாற்றம் அதிகரித்துள்ளது  தெரியவந்துள்ளது.  இது காரமாக இருந்தாலும், சாப்பிட்ட பிறகு உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால் உடலில் உள்ள கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.

மேலும்,அந்த அறிக்கையின்படி, சிவப்பு மிளகாயை சாப்பிட்டவுடன் மக்களுக்கு பசி ஏற்படாது. ஏனென்றால், கேப்சைசின் உங்கள் பசியைக் கொல்லும். உங்கள் வளர்சிதை மாற்றத்துடன், சிவப்பு மிளகாய் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் நீங்கள் அதிக ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் வளர்சிதை மாற்றம் விரைவான வேகத்தில் இருக்கும்போது, ​​உங்கள் ஆற்றல் நிலை உயர்கிறது மற்றும் கொழுப்பு எரிக்கப்படுகிறது.