Payload Logo
Untitled category

உங்க வீட்ல குக்கர் பயன்படுத்துறீங்களா? அப்போ இந்த பதிவை படிங்க..!

Author

k palaniammal

Date Published

cooker

Cooker rice-நம் பரபரப்பான  வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருகிறோம்,  நாம் வேலைகளை எளிதாக்க  பல நவீன பொருள்களும் வந்துவிட்டது. அதில் ஒன்றுதான் குக்கர். இந்த குக்கரை  பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

முந்தைய காலங்களில் நாம் அரிசியை வேகவைத்து அதில் உள்ள அதிகப்படியான தண்ணீரை வடித்து பிறகு சாப்பிட்டு வந்தோம், இதுவே நம் பண்பாடாகவும் இருந்தது. ஆனால் இன்று ஆண் பெண் என இருவருமே வேலை செய்கின்றனர் இதனால் நேரம் குறைவாக உள்ளது ,இதனை எளிமையாக்க பல நவீன பொருள்களும் வந்து கொண்டே இருக்கிறது அதில் குக்கரும் ஒன்று.

குக்கரில் நாம் சமைக்கும் பொழுது அது நம் வேலையை சுலபமாக்கி நேரத்தையும் குறைவாக்குகிறது இதனால் அதிக மக்கள் குக்கரில் சமைப்பதை விரும்புகிறார்கள்.

குக்கரில் சமைப்பதால் ஏற்படும் பின் விளைவுகள்:சாதாரணமாக வடித்த சாதத்தில் 30 லிருந்து 40% மாவுச்சத்து குறைக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் இருக்கும். ஆனால் குக்கரில் நாம் சாதத்தை வடிப்பதில்லை இதனால் அதிகப்படியான மாவுச்சத்து சர்க்கரையாக உடலில் மாறி வருகிறது. இதனால் சர்க்கரை நோய் அதிக அளவில் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் சிறுவயதிலேயே உடல் எடை அதிகரிப்பு போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர்.

பொதுவாக அரிசியை எந்த அளவிற்கு அதிக நேரம் வேகவைத்து எடுத்துக் கொள்கிறோமோ அதுதான் நம் உடலுக்கு நல்லது. குறைவான நேரத்தில் வேகவைத்து எடுத்துக் கொள்ளும் உணவானது நம் உடலுக்கு கேடு விளைவிக்கும். குக்கரில் நாம் சாதம் வேக வைக்கின்றோம் என்பது விட அது மிருதுவாக்கப்படுகிறது என்று தான் கூற வேண்டும்.

அலுமினிய பாத்திரத்தில் சமைக்கும் போது அதில் உள்ள சிறிது அலுமினியம் அந்த உணவிலும் கலக்கப்படும். அதுபோல் அலுமினிய குக்கரில் பயன்படுத்தும்போது அதில் உள்ள அதிகப்படியான அலுமினியம் நம் உடலில் கலக்கிறது, இதனால் மூளையில் உள்ள நியூரான்கள் அழிக்கப்பட்டு ஆஸ்துமா, காசநோய் , அல்சர் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. சமைத்த உணவுகளை வேறொரு பாத்திரத்தில் மாற்றாமல் அப்படியே வைப்பதாலும் பல உடல் உபாதைகள் வரும்.

எனவே எளிதாக இருக்கிறது என்று நாம் பயன்படுத்தும் இன்றைய நவீன பாத்திரங்கள் நமக்கு பாதகமாகத்தான் மாறிவிடுகிறது.