Payload Logo
உலகம்

இன்னும் 2025 புத்தாண்டு பிறக்காத நாடுகள் எவை தெரியுமா? டாப் லிஸ்ட் இதோ...

Author

manikandan

Date Published

Happy New Year 2025

2025 :உலகில் சூரியன் உதிக்கும் நேரத்தை கணக்கிட்டு அனைத்து நாடுகளிலும் அன்றைய நாள் ஆரம்பிக்கிறது. இதனால், மணிநேரம் என்பது சூரியன் உதிப்பதை பொறுத்து ஒவ்வொரு நாட்டிலும் மாறுபடும். அவ்வாறு கணக்கிட்டு பார்த்தல், 2025ஆம் ஆண்டை முதன் முதலாக வரவேற்ற நாடாக மத்திய பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள கிரிபாட்டி (தீவுகள்) நாடு இடம்பிடித்தது.

இந்திய நேரப்பபடி நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு கிரிபாட்டி தீவுகளில் புத்தாண்டு பிறந்தது. அதேபோல, கடைசியாக புத்தாண்டு பிறக்கும் நாடாக அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட ஹவுலந்து தீவுகளில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு 2025 புத்தாண்டு தினம் பிறக்கும். இரு பகுதிகளுக்கும் உள்ள நேர வித்தியாசம் 26 மணிநேரமாகும்.

இந்திய நேரப்படி கணக்கிட்டால், காலை 7.30 மணிக்கு பிரேசிலில் புத்தாண்டு பிறக்கும், அர்ஜென்டினாவில் காலை 8.30 மணிக்கும், வெனிசுலாவில் காலை 9.30 மணிக்கும், கிழக்கு அமெரிக்கா (நியூ யார்க்) மற்றும் கனடா (டொராண்டோ) காலை 10.30 மணிக்கும் புத்தாண்டு பிறக்கும்.

மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் காலை 11.30 மணிக்கும், மேற்கு அமெரிக்கா மற்றும் கனடாவின் மற்ற பகுதிகளில் நண்பகல் 12.30 மணிக்கும், ஹவாய் (அமெரிக்கா) பிற்பகல் 3.30 மணிக்கும், ஹவுலந்து தீவுகளில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கும் 2025 புத்தாண்டு பிறக்கும்.