கேம் சேஞ்சர் திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் தெரியுமா?
Author
bala
Date Published

டெல்லி :மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு பஞ்சமே இருக்காது என்பது சொல்லி தான் தெரியவேண்டும் என்று இல்லை. வழக்கமாகவே அவருடைய படங்களில் இருக்கும் பிரமாண்டம் இந்த படத்திலும் இருக்கிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் படத்தில் இடம்பெற்ற பாடல்களை அவர் காட்டிய விதம் அத்துடன் ராம்சரனுக்கு வைத்த மாஸ் காட்சிகள் என அனைத்திலும் ஷங்கர் குறையாமல் கொடுத்திருக்கிறார். ஆனால், ரசிகர்கள் குறையாக உணர்ந்தது எதுவென்றால் படத்தின் திரைக்கதையில் தான். ஏனென்றால், வழக்கமாக ஷங்கர் இயக்கும் படங்கள் அளவுக்கு இந்த படத்தில் திரைக்கதை சரியாக இல்லை என்பது தான் மக்களின் கருத்தாக இருக்கிறது.
450 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு விமர்சனத்தை பெறவில்லை என்ற காரணத்தால் படக்குழுவும் சோகத்தில் உள்ளது. இருப்பினும் படம் வெளியான முதல் நாளில் வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்று Sacnilk வெளியிட்டுள்ள தகவல் பற்றி பார்ப்போம்.
கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் இப்படம் ரூ 51.25 கோடியை வசூல் செய்துள்ளது. தெலுங்கு மொழியில் ரூ. 42 கோடி, தமிழில் ரூ. 2.1 கோடி வசூலித்தது. கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரூ.0.1 கோடி மற்றும் ரூ. 0.05 கோடி, இந்தியில்ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், உலகம் முழுவதும் படம் ரூ.90 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.