Payload Logo
தமிழ்நாடு

இதுவரை மெட்ரோ ரயிலில் எவ்வளவு பேர் பயணம் செய்துள்ளனர் தெரியுமா?

Author

bala

Date Published

Chennai Metro

சென்னை :2024-ஆம் ஆண்டு முடிந்து 2025-ஆம் ஆண்டு பிறந்துள்ள நிலையில், சென்னை மெட்ரோ இரயிலில் கடந்த ஆண்டு எவ்வளவு பேர் பயணம் செய்துள்ளார்கள் என்பதற்கான விவரத்தை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ இரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர் என எக்ஸ் வலைத்தள பக்கத்தில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து நிர்வாகம் தனது எஸ்கே வலைத்தள பக்கத்தில் கூறியிருப்பதாவது " சென்னை மெட்ரோ இரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024-ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ இரயிலில் பயணித்துள்ளார்கள். 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள்.

2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம்செய்துள்ளனர். அதேபோல், ​2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020–ம்ஆண்டில் 1,18,56,982 கோடி பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 கோடி பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகளும், 2023-ம் ஆண்டில் 9,11,02,957 கோடி பயணிகளும், இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் 10,52,43,721 கோடி பயணிகளும் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளார்கள்.

ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை மொத்தம் 35,53,60,793 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு(OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்" எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

unknown node