Payload Logo
லைஃப்ஸ்டைல்

நீங்களும் சுகப்பிரசவம் பெற இந்த யோகாவை செய்யுங்கள்...!

Author

rebekal

Date Published

normal delivery

பெண்களின் வாழ்நாளில் முக்கியமான ஒரு கால கட்டமே அவர்களின் பிரசவ காலம் தான். கர்ப்பகாலம் பெண்களின் வாழ்க்கையில் மிக இனிமையான ஒரு காலமும் கூட, இந்த நேரத்தில் சில சங்கடங்களை அனுபவித்தாலும், இது அனைவருக்குமே மகிழ்ச்சியை கொடுக்கக் கூடிய ஒன்று. இந்நிலையில் கர்ப்பிணியாக இருக்கக்கூடிய பெண்கள் தங்களுக்கு சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்பதற்காக மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால், இதனால் மட்டும் சுகப்பிரசவம் ஆகிவிடுவதில்லை. யோகா செய்வதால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பு உண்டு என மருத்துவ நிபுணர்களே தெரிவிக்கின்றனர். இன்று எந்தவிதமான யோகா செய்வதால் சுகப்பிரசவம் பெற முடியும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

வீரபத்ராசனம்

வீரபத்ராசனம் என்பது உடல் முழுவதற்கும் ஆற்றலை அளிக்க உதவுவதுடன், இது கர்ப்பமாக இருப்பவர்களின் மனநிலையில் மேம்பாட்டை கொண்டு வர உதவுகிறது. மேலும் இவை தொடை மற்றும் தோள்பட்டை தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

வ்ருக்ஷாசனா

உடல் அழகை அதிகரிக்கவும், முதுகு வலியை நீக்குவதற்கும் இந்த ஆசனம் உதவுகிறது. மேலும் கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிகம் சந்திக்க கூடிய நெஞ்செரிச்சல் பிரச்சனைகளை போக்கவும் இது உதவுகிறது.

இது இடுப்பு, தொடை மற்றும் முதுகு தசை வலிகளை நீக்குவதற்கு உதவுகிறது. மேலும் மன அழுத்தத்தை நீக்குவதற்கு இவை பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மிகப்பெரும் பிரச்சனையாக உள்ள செரிமான பிரச்சனை நீக்குவதற்கும் இது உதவுகிறது.

பெரும்பாலான பெண்கள் தங்கள் கர்ப்ப காலத்தில் எதிர்கொள்ள கூடிய பிரச்சனைகளாகிய வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்க இந்த ஆசனம் உதவுகிறது.

மலாசனம்

இந்த மலாசனத்தை செய்வதன் மூலமாக கர்ப்பிணிகள் எளிதில் சுகப்பிரசவம் அடைவதற்கு உதவுகிறது. இந்த ஆசன முறையை தொடர்ந்து செய்வது மிகவும் நல்லது. சுகப்பிரசவத்தை விரும்புபவர்கள் நிச்சயம் இந்த ஆசனத்தை தினமும் செய்யலாம்.

இது மட்டுமல்ல மேற்குறிப்பிட்டுள்ள ஆசனங்கள் அத்தனையையும் கர்ப்பிணிகள் செய்வது மிகவும் நல்லது. கர்ப்ப காலங்களில் உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பிரச்சனையை தடுக்க உதவும் இந்த ஆசனங்கள் தான் நமக்கு பிரசவ நேரத்தில் சுக பிரசவத்தை ஏற்படுத்தவும் உதவும்.