Payload Logo
இந்தியா

புதுச்சேரி மக்களுக்கு குட்நியூஸ்... பொங்கல் பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?

Author

gowtham

Date Published

Puducherry - Pongal 2025

புதுச்சேரி:பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன்  அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில் செலுத்தப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்குவது வழக்கம். அதே போல இந்தாண்டும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை இடம் பெற்ற பொங்கல் பரிசு தொகுப்பை தமிழக அரசு.

வழக்கமாகம் போல, பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 1000 ரூபாயும் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், இந்த முறை ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதனை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள், பொங்கல் பரிசு தொகுப்புடன் சிறப்பு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பிற்கு பதிலாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.750 வழங்கப்படும் என்றும், அந்த பரிசு தொகை பயனாளிகளின் வங்கிக்கணக்கில் ரூ.750 செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.