Payload Logo
லைஃப்ஸ்டைல்

உங்களுக்குள் இருக்கும் உங்கள் எதிரி.. வெற்றிபெற உதவும் அசத்தல் மிலிட்டரி ரூல்ஸ்...

Author

manikandan

Date Published

Morning Good Habbits

Motivational: நாம் அனைவருக்கும் நமது வாழ்வில் வெற்றி பெற வேண்டும். நமக்கு பிடித்த விஷயத்தை நமக்கு பிடித்த நேரத்தில் செய்து , அதன் மூலம் சம்பாதிக்க வேண்டும் , பிடிக்காத வேலையை, வேலை சூழலை விட்டு வெளியே வரவேண்டும் என எண்ணம் இருக்கும். ஆனால் அதனை எப்படி செய்வது என அறியாமல், அதற்கான வழியை கூட தேடாமல் தினமும் வலியோடு நாட்களை கடத்தி கொண்டு இருப்போம்.

அப்படி பிடிக்காத வேலை, புதிய முயற்சி செய்யாத வாழ்க்கை , முடிவுகளை எடுக்க தெரியாத திறன் ஆகியவை நம்மை ஒரு கட்டத்தில் நம்மை முன்னேற விடாமல் ஒரே இடத்தில் நம்மை தக்கவைத்து விடும். அதனால் பின்னாளில் நமக்கு தேவையான விஷயத்தை கூட செய்யமுடியாமல் போகலாம்.

இதனை தவிர்க்கவே அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் எழுதியDiscipline Equals Freedom Field Manualஎனும் புத்தகத்தில் இருந்து அவர் தன் வாழ்வில் முன்னேற உபயோகப்படுத்திய முக்கியமான 3  ராணுவ விதிகளை இதில் குறிப்பிட்டுள்ளோம்.

சுயகட்டுப்பாடு :

நாம் நமக்கு பிடித்த விஷயத்தை சுதந்திரமாக செய்ய வேண்டும் என்றால், முதலில் நமக்கு என்ன பிடிக்கும். அதனை எவ்வாறு செய்வது சிந்தித்து, அதனை தினமும் செய்ய ஆரம்பிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும். நமக்கு பிடித்த விஷயத்தை தொடர்ந்து செய்வதை நிறுத்த கூடாது. நமக்கு பிடித்த துறை பற்றி தினமும் படிப்பது, தினமும் உடற்பயிற்சி, விளையாட்டுகளில் ஈடுப்படுவது போன்ற நல்ல விஷயங்களில் ஈடுபட வேண்டும்.

ராணுவ கட்டுப்பாடு :

இதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவென்றால், தற்போது நமக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டது. ஆனால் அதனை செய்ய காலம் தாழ்த்தி நாளை, நாளை என காலம் தாழ்த்தினால் அது பின்னாளில் என்னவாக இருக்கும். ஒருவேளை நாம் அதனை செய்யாமல் விட்டால் வயதான காலத்தில் நமக்கு என்ன மாதிரியான பின்விளைவுகளை தரும் என தற்போது யூகித்து அதனை எழுதிக்கொள்ள வேண்டும். அதே போல இதனை செய்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை எழுதி கொள்ள வேண்டும். இவ்விரண்டையும் ஒப்பிட்டு, எந்தவித காரணமும் கூறாமல் நமக்கு கிடைக்கும் நலனை மனதில் கொண்டு நமக்கு பிடித்ததை தொடர்ந்து செய்து கொண்டு இருக்க வேண்டும்.

பயத்தை ஓரம் கட்டுங்கள் :

நமக்கு ஒரு விஷயம் பிடித்து இருக்கும். நாம் பார்க்கும் வேலை வேறு ஒன்றாக இருக்கும். நமக்கு வயதாகிவிட்டது. காலம் கடந்துவிட்டது. தோற்றால் என்னவாகும் என பயந்துவிட கூடாது. முயற்சி செய்யாமல் வேடிக்கை பார்த்து வாழ்வில் தோற்பதற்கு பதில், முயற்சித்து பார்த்து தோல்வி கண்டு அதன் மூலம் புதிய வழியை கண்டுபிடித்து வெற்றி காண்பதே வெற்றியாளருக்கு அழகு. ஆதலால் பயத்தை ஓரம் கட்ட வேண்டும்.

கூடுதல் சில யுகத்திகள்....

சிலருக்கு எனக்கு எதில் திறமை இருக்கிறது, எது எனக்கு பிடித்து இருக்கிறது, என்ன செய்ய வேண்டும் என தெரியாது என இருப்பார்கள். சிலருக்கு வேலை செய்யும் இடம் பிடிக்காது. ஆனால் வேலை பிடித்து செய்து கொண்டு இருப்பர். ஒருக்கட்டத்தில், வேலை செய்யும் இடத்தால் வேலையே பிடிக்காது என மாறிவிடுவர். அதனை கண்டறிய வேண்டும்.

நமது எதிரி :

நமது எதிரி என்பது நமது சோம்பேறித்தனம் தான். அதனுடன் தான் நாம் முதலில் சண்டையிட்டு ஜெயிக்க வேண்டும். நமது சோம்பேறித்தனம் முதலில் நம்மிடம் செய்யக்கூடாது என முடிவு செய்து காரணத்தை நம்மிடம் அடுக்கி விடும். அதன் முன் நீங்கள் இதனை செய்யாவிட்டால் என்னவாகும் என கூறி காரணத்தை அடுக்க வேண்டும். அதனுடன் போட்டியிட்டு அதனை வென்று காட்ட வேண்டும். அதற்கு கீழே உள்ள சில யுக்திகள் உங்களுக்கு கைகொடுக்கும்.

சூரியனுக்கு முன்..

எப்போதும் சூரியன் எழுவதற்கு முன்னர் நாம் எழுந்திருக்க வேண்டும். எழுந்து இன்று நாம் என்னென்ன செய்ய வேண்டும். வேலையில் முன்னறி செல்ல அடுத்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டியலிட வேண்டும்.

உடற்பயிற்சி :

அதிகாலை எழுந்து என்னென்ன செய்ய வேண்டும் என பார்த்துவிட்டு பின்னர், உடற்பயிற்சி செய்ய வேண்டும். நமது உடலுக்கு என்ன உடற்பயிற்சி சரியாக இருக்கும் என கவனித்து அதனை தினமும் செய்ய வேண்டும். சிலருக்கு தியானம், சூரிய நமஸ்காரம் போன்றவை, சிலருக்கு மைதானத்தில் ஓடுவது மற்ற சில உடற்பயிற்சி, சிலருக்கு ஜிம் சென்று உடற்பயிற்சி என ஒவ்வொருவருக்கும் உடற்பயிற்சி மாறும்.

முதலில் முக்கிய வேலைதான்...

நாம் பட்டியலிட்டபடி, முதலில் நமது வாழ்வுக்கு முன்னேற செய்ய வேண்டிய வேலை எதுவென கண்டறிந்து அதனை தான் முதலில் செய்து முடிக்க வேண்டும். இந்த வழிகளை பின்பற்றி தொடர்ந்து செய்து வந்தாலே குறிப்பிட்ட வாரங்களில் நமது வாழ்வில் நடக்கும் மாற்றங்களை நாம் காணலாம்.