Payload Logo
சினிமா

வடசென்னை விவகாரம்: "தனுஷ் பணமே கேக்கல" - இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

Author

gowtham

Date Published

dhanush - simbu

சென்னை :வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக இருக்கும் என்றும், இதற்கு ராஜன் வகையறா என தலைப்பு வைக்கப்படவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கு தனுஷ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், வடசென்னை உரிமை அவரிடம் உள்ளதால் ரூ.20 கோடி வரை கொடுத்து NOC சான்றிதழ் பெற வேண்டுமென அவர் தரப்பில் டிமாண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்தது.

இந்த நிலையில், 'வடசென்னை 2' அன்புவின் எழுச்சி குறித்த கதை, அதில் தனுஷ் நடிப்பார் என்று தெரிவித்துள்ளார். சிம்பு நடிக்கும் ஒரு படமும் அதே 'வடசென்னை' உலகத்தில், அதே காலகட்டத்தில் நடக்கும் என்றும், அதே கதாபாத்திரங்கள் இதிலும் இடம் பெறும் என்றும் வெற்றிமாறன் கூறியது  ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தனுஷ் பணம் கேட்டாரா?

இது குறித்து விளக்கிய இயக்குநர் வெற்றிமாறன், ''சிம்பு உடனான படம் குறித்து தனுஷிடம் 'இந்தக் கதையை வடசென்னை உலகில் அதே காலகட்டத்தில் நடக்கும் வேறொரு கதையாகவும் செய்யலாம் அல்லது STAND ALONE-ஆகவும் செய்யலாம். நீங்கள்தான் வடசென்னையின் காபிரைட் ஓனர் என்பதால் உங்கள் விருப்பப்படி செய்வோம்' என்றேன்.

அவர், 'அப்படியெல்லாம் நீங்கள் நினைக்காதீர்கள், உங்கள் கிரியேட்டிவிட்டிக்கு செய்யுங்கள். நான் டீமிடம் பேசி. NOC கொடுக்கச்சொல்கிறேன். பணம் வேண்டாம்' என்றார். அப்படியிருக்கையில் கடந்த சில தினங்களாக வரும் தவறான செய்திகள் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளன.

unknown node

தனுஷ் உடன் பிரச்சினையா?

சிம்புவை வைத்து இயக்குனர் வெற்றிமாறன் வடசென்னை கால கட்டத்தில் நடக்கும் வேறொரு கதை, வடசென்னை படத்தில் நடித்த சில கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் இருக்கும் என்பதால் தனுஷிடம் பேசியபோது, தாராளமாக வடசென்னை கதையை சிம்புவை வைத்து எடுங்கள் என தயாரிப்பாளராக எனக்கு ஒப்புதல் அளித்தார்.

அதற்காக எந்தப் பணமும் வேண்டாம் என்றும் மறுத்தார். எங்களின் உறவு நீண்ட காலமாக நல்ல புரிதலுடன் இருக்கிறது. எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. புது மாதிரியான ஒரு அனுபவமாக இந்த திரைப்படம் இருக்கும் என தனுஷ் உற்சாகம் கொடுத்தார் என கூறியிருக்கிறார்.

பணம் கேட்பது சரியானதுதான்

தனுஷ்தான் 'வடசென்னை' பட தயாரிப்பாளர். அதனால் அவரின் COPYRIGHT காட்சியை மற்றவர் பயன்படுத்த பணம் கேட்பது சரியானதுதான். இதற்காக அவரை வில்லன் போல பார்க்கவேண்டிய அவசியமில்லை என்றும் வெற்றிமாறன்  கூறியிருக்கிறார்.