Payload Logo
திரைப்பிரபலங்கள்

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் ...உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

Author

bala

Date Published

AK and Loki

சென்னை :இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய், கார்த்தி உள்ளிட்ட நடிகர்களை வைத்து படம் இயக்கியுள்ள நிலையில், அஜித்துடன் எப்போது ஒரு படம் செய்வார் என்கிற எதிர்பார்ப்புகள் அதிகமாகவே எழுந்திருக்கிறது. ஏற்கனவே, நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ளும்போதெல்லாம் அஜித்துடன் எப்போது படம் என்று தான் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

அப்படி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கண்டிப்பாக அஜித்துடன் படம் செய்ய ஆர்வம் இருக்கிறது. அவரை வைத்து தீனா போல ஒரு படத்தை இயக்க ஆசைப்படுகிறேன்" எனவும் தெரிவித்திருந்தார். இருப்பினும் எப்போது இருவரும் இணையும் படம் நடக்கும் என தெரியாமல் அதற்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

மேலும், தற்போது லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தினை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் , படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அப்படி தான் படத்தின் ப்ரோமோஷனுக்காக லோகேஷ் கனகராஜ் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்க கலந்துகொண்டார்.

அந்த பேட்டியில் அவரிடம் அஜித்துடன் படம் இயக்குவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் " நான் அஜித் சாரை வைத்து 100 % ஆக்சன் படம் ஒன்றை இயக்க ஆசைப்படுகிறேன். நிச்சயமாக அவரை வைத்து ஒரு படத்தை இயக்குவேன் என்பது உறுதியாக சொல்கிறேன். அதற்கான பேச்சுவார்த்தைகள் சுரேஷ் சந்திரா சார் மூலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. எல்லாம் முடிந்து உறுதியான பிறகு அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.