Payload Logo
கிரிக்கெட்

மனைவியை பிரிந்தாரா யுஸ்வேந்திர சாஹல்? தீயாய் பரவும் தகவல்!

Author

bala

Date Published

Yuzvendra Chahal Dhanashree Verma

சென்னை :சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அப்படி இப்போது விடை தெரியாத ஹாட் டாப்பிக்காக இருக்கும் விஷயம் என்னவென்றால், இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? இல்லையா என்பது தான்.

கடந்த சில நாட்களாகவே, யுஸ்வேந்திர சாஹல் தன்னுடைய மனைவி தனஸ்ரீ வர்மாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவி வருகிறது. இப்படியான செய்திகள் பரவி வருவதற்கு முக்கியமான காரணமே சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா தங்கள் சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் பின்பற்றுவதை நிறுத்தி, இதற்கு முன்னதாக இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டெலிட் செய்தது தான்.

இந்த தகவல் வெளியான உடனே சமூக வலைத்தளங்களில் யுஸ்வேந்திர சாஹலுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? என கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள். இந்த விவகாரத்தில், தனஸ்ரீ வர்மா பல ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக புகைப்படங்கள் எடுத்திருந்ததை வெளியீட்டு இதன் காரணமாக தான் விவாகரத்து எனவும் தெரிவித்து வருகிறார்கள்.

இருப்பினும், சமூக வலைத்தளங்களில் ஒரு விஷயம் கிடைத்துவிட்டது என்றால் உடனடியாகவே பேச தொடங்கிவிடுவார்கள். அவர்கள் இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை எனவே, அதற்குள் இப்படி பேசுவது தவறு எனவும் யுஸ்வேந்திர சாஹல் ரசிகர்கள் ஒரு பக்கம் கூறி வருகிறார்கள்.

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ வர்மா இருவரும் பின் தொடர்வதை நிறுத்தினாலும் இன்னும் இருவருமே சமூக வலைத்தள பக்கங்களில் விவாகரத்து செய்வதாக அறிவிக்கவில்லை. எனவே, தற்போது இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், விரைவில் இதற்கு அவர்கள் விளக்கம் கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.