Payload Logo
சினிமா

"வீழ்வேன்னு நினைச்சியா? எனக்கு ஒன்னும் இல்லை" அதே கம்பீரத்துடன் விஷால்!

Author

gowtham

Date Published

vishal

சென்னை:கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு விஷாலுக்கு" என பதறிப்போனார்கள்.

அதாவது, மதகஜ ராஜா படத்தின் வெளியீட்டுக்கு முன்னதாக, சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவரது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததை அடுத்து, நடிகருக்கு கடுமையான உடல்நலப் பிரச்சினை இருப்பதாகவும், மூன்று முதல் ஆறு மாதங்களுக்கு படங்களில் நடிக்க மாட்டார் என்றும் இணையத்தில் பரவியது.

மேலும், விஷால் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், வீட்டில் ஓய்வெடுத்து வருவதாகவும் அடுத்தடுத்து செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுந்தர் சி.யுடன் கலந்து கொண்டார்.

நேற்று படத்தின் பிரீமியர் ஷோ முடிந்த பிறகு பேசிய விஷால், "தனது கை தற்போது நடுங்கவில்லை, மைக்கை நன்றாகவே பிடித்திருக்கிறேன். என்மீது அன்பு காட்டிய ரசிகர்களுக்கு நன்றி என்று உருக்கமாக பேசினார். இதுபோன்ற அனைத்து வதந்திகளையும் மறுத்த விஷால், மார்க் ஆண்டனி படத்தில் வரும் வசனத்தை பேசினார். 'வீழ்வேன்னு நினைச்சியா? விழவும் மாட்டேன்... விடவும் மாட்டேன்' என்று கூறி அரங்கத்தை அலற வைத்தார்.

தனது கைகள் இனி நடுங்காது என்று கூறியதோடு, அவர் தனது தந்தையின் ஆதரவு மற்றும் அவரது ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்ததோடு, அவர்களுக்கு எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்று கூறினார்.மேலும் அவர் பேசுகையில், மருந்துகளை விட "COME BACK.. GET WELL SOON" உங்களின் வேண்டுதல்கள் தான் என்னை குணமாக்குச்சு' என உருக்கத்துடன் பேசி தனது நன்றிகளை தெரிவித்தார்.

சுந்தர்.சி இயக்கத்தில் நடிகர்கள் விஷால், அஞ்சலி, வரலக்ஷ்மி சரத்குமார், சந்தானம் என பலர் நடித்துள்ள ‘மதகஜராஜா’ படம் 12 வருடங்களுக்கு பிறகு, இன்று (ஜன.,12) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.