Payload Logo
திரைப்படங்கள்

காதலர்களை கவர்ந்ததா தனுஷின் "NEEK"? நெட்டிசன்கள் சொல்லும் விமர்சனங்களை பாருங்கள்!

Author

bala

Date Published

Dhanush NEEK

சென்னை :நடிகராக கலக்கி கொண்டு இருந்த தனுஷ் இப்போது இயக்குநராக கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக காதலர்களுக்காக NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்) என்கிற படத்தினை இயக்கி உள்ளார்.

இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, பிரிமீயர் காட்சியை பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் பலரும் படத்தினை பாராட்டி பதிவிட்டு இருந்தார்கள். அதனை தொடர்ந்து படம் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடயை எக்ஸ் வலைத்தள பக்கத்தில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதனை பற்றி பார்ப்போம்...

படத்தை பார்த்த நடிகர் அருண் விஜய் " #NEEK.. என்ன ஒரு ஜாலியான படம், ரொம்பவே ரசித்தேன்!! தனுஷ் அண்ணன் இதை அருமையா செஞ்சிருக்கார். அவருடைய திரைக்கதை, நகைச்சுவையான ஒன் லைனர்கள், கதாபாத்திர வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது. இசையமைப்பாளர் ஜிவி இசையில் அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார். முழு நடிகர்களுக்கும் சிறப்பு பாராட்டு; மிகவும் திறமையானவர் மற்றும் புதுமையானவர்! பார்க்க ஒரு விருந்து" என கூறியுள்ளார்.

unknown node

படம் பார்த்த மற்றொருவர் "இந்தப் படம் புதுமையானதாக இல்லாவிட்டாலும், அதன் எளிமையான செயலாக்கம் அதை ஒரு சுவாரஸ்யமான படமாக மாற்றுகிறது. இது ஒரு பழக்கமான காதல் கதை, இது யூகிக்கக்கூடிய ஆனால் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

unknown node

படம் பார்த்த மற்றொருவர் " NEEK ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம். தனுஷ் தான் வாக்குறுதியளித்ததை சரியாக நிறைவேற்றுகிறார் - புத்துணர்ச்சியூட்டும் வகையில் ஈர்க்கக்கூடிய மற்றும் மகிழ்ச்சிகரமான முறையில் சொல்லப்பட்ட ஒரு பழக்கமான காதல் கதை. இந்த வார இறுதியில் உங்கள் நண்பர்களுடன் இதைப் பாருங்கள்" என கூறியுள்ளார்.

unknown node

படம் பார்த்த மற்றொருவர் " படத்தில் வரும் நடிகைகள் நன்றாக நடித்துள்ளனர். ஆனால், படத்தின் திரைக்கதை கொஞ்சம் மோசமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக சொல்லவேண்டும் என்றால் படம் ஏமாற்றம் என கூறி 5 மார்க்கிற்கு 1.5 மார்க்" என கூறியுள்ளார்.

unknown node

படம் பார்த்த மற்றொருவர் "வழக்கமான காதல் கதை மற்றும் சராசரி முதல் பாதி #NEEK சில நகைச்சுவை பகுதிகள் அழகாகவும் நன்றாகவும் உள்ளன! மிஸ்டர் டி யின் ஒளிப்பதிவு மிகவும் அழகாக இருக்கிறது, ஆனால் காதல் மற்றும் உணர்ச்சிகளுடன் நம்மளை ஈர்க்கவில்லை" என கூறியுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node