Payload Logo
தமிழ்நாடு

திருப்பூரில் கொடூரம்! கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை!

Author

bala

Date Published

CrimeAgainstWomen

திருப்பூர் :ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட அந்த பெண் கணவர் மற்றும் குழந்தையுடன் வேலை தேடி தமிழகத்திற்கு வந்துள்ளார். அங்கு வேலை கிடைக்காததால், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்து, திருப்பூர் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது, பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள்—முகமது நதீம் (24), முகமது டேனிஷ் (25), மற்றும் முகமது முர்ஷித் (19)—அவர்களை சந்தித்து, வேலை வாய்ப்பு ஏற்பாடு செய்வதாக கூறி, லட்சுமி நகர் பகுதியில் உள்ள தங்களின் வசிப்பிடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு, இரவு உணவுக்குப் பிறகு, பீகாரை சேர்ந்த அந்த 3 பேரும் கத்தியை காட்டி மிரட்டி, கணவனை கட்டிப்போட்டு, அவரது கண்முன்னே மனைவியை மூவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்பத்துடன் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பெண் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் மூன்று குற்றவாளிகளையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாவே தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் எழுந்து வருவது மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் இனிமேல்  நடைபெறக்கூடாது எனவும் அதற்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.