நாய்-க்கு இருப்பிடச் சான்றிதழ்.., வினோத சம்பவத்தால் பீகாரில் எழுந்தது சர்ச்சை.!
Author
gowtham
Date Published

பாட்னா :பீகாரின் பாட்னா மாவட்டத்தில் உள்ள மசௌர்ஹி பகுதியில், " நாய் பாபு, S/o, குட்டா பாபு'' என்ற பெயரில் ஒரு நாய்க்கு இருப்பிடச் சான்றிதழ் வழங்கப்பட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வினோதமான சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தச் சான்றிதழ் வைரலான பிறகு, மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு இது குறித்துத் தெரியவந்தது. இந்த குடியிருப்புச் சான்றிதழ் பாட்னா மாவட்டத்தின் மசௌரி மண்டல அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த குடியிருப்பு சான்றிதழ் RTPS கவுண்டரிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.
சான்றிதழ் பெற்ற குற்றவாளிகள் மற்றும் அதை வழங்கிய அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் பீகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்த (SIR) பிரச்சாரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
தற்பொழுது, பிகாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த முறை செயல்படுத்தப்பட்டு, 11 ஆவணங்கள் மட்டுமே தகுதியாக ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதிலும் மோசடி செய்யமுடியும் என நிரூபிக்கப்பட்டது, பிகார் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.
பீகார் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தில் உள்ள ஊழல்களை மக்களிடம் திணிப்பதற்கு முன்பு, தேர்தல் ஆணையம் சில அடிப்படை வேலைகளை செய்ய வேண்டும். உண்மையான மனிதர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள். ஆனால், இந்த 'நாய் பாபு 'தான் வாக்களிக்க தகுதியுடையவரா?என்று இந்திய தேர்தல் ஆணையத்தை திரிணாமுல் காங்கிரஸ் விளாசியுள்ளது.