Payload Logo
தமிழ்நாடு

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் - சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Author

bala

Date Published

electric bus chennai

சென்னை :தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து பணிமனையிலிருந்து தொடங்கி வைக்கிறார். இந்த மின்சாரப் பேருந்துகள், உலக வங்கியின் ஆதரவுடன் சென்னை நகர கூட்டு திட்டத்தின் (சி-சஸ்ப்) முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இந்தப் பேருந்துகள் சுற்றுச்சூழல் மாசு குறைப்பு மற்றும் பயணிகளின் வசதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய மின்சாரப் பேருந்துகளில் பயணிகளுக்கு சி.சி.டி.வி கண்காணிப்பு கருவிகள், லக்கேஜ் வைப்பதற்கு பிரத்யேக இடம், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.  தாழ்தள வடிவமைப்பு கொண்ட இந்தப் பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு எளிதாக பயணிக்க உதவும். இவை வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, தொண்டையார்பேட்டை மற்றும் மத்திய பணிமனை ஆகிய ஐந்து முக்கிய பணிமனைகளிலிருந்து 50 வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.

இந்தத் திட்டத்தின் மூலம், 2025 இறுதிக்குள் மொத்தம் 625 மின்சாரப் பேருந்துகள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும். இவற்றில் 400 ஏ.சி இல்லாதவை மற்றும் 225 ஏ.சி வசதி கொண்டவை. அசோக் லேலாண்டின் துணை நிறுவனமான ஓஎச்எம் குளோபல் மொபிலிட்டி, இந்தப் பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த (ஜிசிசி) முறையில் இயக்குகிறது. இதன்படி, ஏ.சி இல்லாத பேருந்துகளுக்கு கிலோமீட்டருக்கு ரூ.77.16, ஏ.சி பேருந்துகளுக்கு ரூ.80.86 செலுத்தப்படும், இது டீசல் பேருந்துகளின் செலவான ரூ.116-ஐ விட குறைவாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம், 2025 இறுதிக்குள் மொத்தம் 625 மின்சாரப் பேருந்துகள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும். இவற்றில் 400 ஏ.சி இல்லாதவை மற்றும் 225 ஏ.சி வசதி கொண்டவை. அசோக் லேலாண்டின் துணை நிறுவனமான ஓஎச்எம் குளோபல் மொபிலிட்டி, இந்தப் பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த (ஜிசிசி) முறையில் இயக்குகிறது.

இதன்படி, ஏ.சி இல்லாத பேருந்துகளுக்கு கிலோமீட்டருக்கு ரூ.77.16, ஏ.சி பேருந்துகளுக்கு ரூ.80.86 செலுத்தப்படும், இது டீசல் பேருந்துகளின் செலவான ரூ.116-ஐ விட குறைவாகும். மேலும், இந்த மின்சாரப் பேருந்துகள், ஒரு முறை முழு சார்ஜில் 180-250 கி.மீ. பயணிக்கும் திறன் கொண்டவை. விரைவு சார்ஜிங் வசதிகள், வியாசர்பாடி உள்ளிட்ட பணிமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.