மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ், விஜய் சேதுபதி, விஜயின் மகன்.., களைகட்டும் ஜி.கே.மணி இல்ல திருமண விழா!
Author
manikandan
Date Published

சேலம் :பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை நடைபெற உள்ளது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சிகள் இன்று மாலை 6 மணியளவில் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்த திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்க சேலம் வந்துள்ளனர். இதற்காக தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் சேலம் விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அதே விமானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பிரபலங்களும் வந்துள்ளனர்.
ஜி.கே.மணியின் மகனும் லைகா திரைப்பட தயாரிப்பு நிறுவன முக்கிய நபருமான ஜி.கே.எம்.தமிழ்குமரனும் வந்துள்ளார். அதேபோல நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட திரை பிரபலங்களும் வந்துள்ளனர். மேலும் நடிகரும், தவெக கட்சித்தலைவருமான விஜயின் மகன் ஜேசன் விஜய்யும் இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள வந்துள்ளார்.
ஜி.கே.மணி இல்ல திருமண நிகழ்வில் ஜேசன் விஜய் கலந்து கொள்ள வந்ததை குறிப்பிட்டு சிலர் விஜய்க்கு பதிலாக வந்துள்ளாரா என்றும் சிலாகித்தனர். ஆனால், லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார். லைகா நிறுவன முக்கிய நிர்வாகியாக உள்ள தமிழ்குமரன் அழைப்பின் பெயரில் ஜேசன் விஜய் வந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், விஜய் சேதுபதி, ஜேசன் விஜய் என இன்னும் பல்வேறு அரசியல் மற்றும் திரை பிரபலங்கள் இத்திருமண நிகழ்வில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.