"முதல்வரின் ஆணவம் நல்லதல்ல" முதலமைச்சருக்கு ஆளுநர் மாளிகை கண்டனம்.!
Author
gowtham
Date Published

சென்னை:வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி தொடங்கி, நேற்று (11ம் தேதி) வரையில் நடைபெற்றது. முதல் நாளில், சட்டப்பேரவைக்குள் நுழைந்த ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட உடனேயே அங்கிருந்து வெளியேறினார்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனங்களையும் கருத்துகளையும் முன்வைத்தனர். அதிலும் குறிப்பாக, "சட்டப் பேரவைக்கு ஆளுநர் வருகிறார், ஆனால் உரையாற்றாமலே போய்விடுகிறார். அதனால்தான் அவரின் செயல்பாடுகளை சிறுபிள்ளைத்தனமானது. தமிழ்நாடு வளர்ந்து வருவதை ஆளுநரால் ஜீரணிக்க முடியவில்லை என நினைக்கிறேன்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில், அடிப்படைக் கடைமைகளை செய்யச் சொல்வது சிறுபிள்ளைத்தனமானது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுவதாக ஆளுநர் மாளிகை விமர்சித்துள்ளது. ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "தமிழ்நாடு முதலமைச்சர் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்.
பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி.
"இத்தகைய ஆணவம் நல்லதல்ல"..பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்" இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
unknown node