Payload Logo
தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்களில் வீடு திரும்புகிறார் - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை.!

Author

gowtham

Date Published

MK Stalin - Apollo Hospital

சென்னை :தமிழக முதல்வருக்கு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது, அவர் இயல்பாக இருப்பதாகவும் வழக்கமான பணிகளை இரு நாட்களில் மேற்கொள்வார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ''முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதய சிகிச்சை மருத்துவர் Dr.G.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது.

இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நலமாக உள்ளார்கள். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

unknown node