பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!
Author
gowtham
Date Published

சென்னை :பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸின் 86வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மேலும், ராமதாஸ் தனது பிறந்தநாளை தைலாபுரத்தில் உள்ள தனது தோட்டத்தில் கொண்டாடி, 86 மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தார். இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்த்தில், ''"நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்" என முகுறிப்பிட்டு, ராமதாஸின் பொது வாழ்வு மற்றும் சமூக நீதிக்கான பங்களிப்பைப் பாராட்டியுள்ளார்.
unknown node