Payload Logo
தமிழ்நாடு

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

Author

gowtham

Date Published

TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy

சென்னை:தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது. அண்ணா பல்கலைகழக சம்பவம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றது. மேலும், பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த சவாலுக்கு எடப்பாடி பழனிசாமி மௌனம் காத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ்:யார் அந்த சார் என கேட்டால் எதற்கு பதற வேண்டும்?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:குற்றவாளிக்கு தகுந்த தண்டனை வாங்கி கொடுப்போம்.

சபாநாயகர்:ஏற்கெனவே இந்த விவகாரம் அவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு முதல்வரும் பதில் கூறிவிட்டார். இதைப்பற்றி மேலும் விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.

துரைமுருகன்:சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கிறது, அவர்களிடம் உங்கள் புகாரை சொல்லுங்கள்

நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது

நீட் தேர்வை நாங்கள் ரத்து செய்ய முடியாது, ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது என சட்டப்பேரவையில் ஈபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு முதலவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். மத்தியில் இந்தியா கூட்டணி, ஆட்சிக்கு வந்திருந்தால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற்றிருப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் சவால்

முதலமைச்சர்:பொள்ளாச்சி வழக்கில் புகார் தந்தவுடன் FIR போடவில்லை; சென்னை மாணவி விவகாரத்தில் புகார் அளித்தவுடன் FIR போடப்பட்டது.

ஈபிஎஸ்:பொள்ளாச்சி விவகாரத்தில் புகார் அளித்த அடுத்த 24 மணி நேரத்தில் முக்கிய குற்றவாளிகள் 4 பேரில், மூவர் கைது செய்யப்பட்டனர்.

முதலமைச்சர்:புகார் அளிக்கவே 2 வருடம் ஆகியிருக்கிறது.புகார் அளித்த 12 நாட்களுக்கு பிறகுதான் FIR போடப்பட்டுள்ளது.

முதலமைச்சர்:நாளை சபாநாயகரிடம் ஆதாரத்தைத் தருகிறேன். அவரும் (எடப்பாடி பழனிசாமி) தர வேண்டும் என்றார்

முதலமைச்சர்:நான் சொல்வதை தவறு என நீங்கள் நிரூபித்தால் நீங்கள் அறிவிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்கிறேன். அதே போல நான் சொல்வது உண்மை என்றால் நீங்கள் தண்டனையை ஏற்பீர்களா?

சபாநாயகர்:நாளை காலை இருவரும் ஆதாரங்களை வழங்குங்கள், இருவரும் சவால் விட்டிருக்கிறார்கள். இத்தோடு முடியுங்கள் என்றார்.

ஸ்டாலின் கூறியதை திருப்பி சொன்ன ஈபிஎஸ்

"எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யாமல் அவியலா செய்யும்?" என்று முதல்வர் ஸ்டாலினின் அதே கேள்வியை ஈபிஎஸ் இன்று முதல்வரிடமே கேட்டார். 2020ஆம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அது அரசியல் செய்வதாக ஈபிஎஸ்  பேசியிருந்தார். அதற்கு ஸ்டாலின் அப்போது இந்த பதிலை அளித்தார். இன்று சட்டப்பேரவையில் ஈபிஎஸ் அரசியல் செய்வதாக ஸ்டாலின் குற்றம் சாட்டிய போது ஈபிஎஸ்அதே பதிலை கொடுத்து அதிர வைத்தார்.