சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!
Author
castro
Date Published

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இன்று (ஜூலை 31) நடைபெற்ற விசாரணையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபையில் பக்தர்கள் தரிசனத்துக்காக தீட்சிதர்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கையால் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா?
அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்களா? பக்தர்கள் இடையூறுகளை சந்திக்கிறார்களா? என்று நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தீட்சிதர்கள் மற்றும் அறநிலையத்துறை தரப்பு என ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் தீட்சிதர்கள் கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வதை தடை செய்ததாகவும், அரசு உத்தரவை மீறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. முன்னதாக, 2024 ஜூலை 10-ஆம் தேதி உயர் நீதிமன்றம், ஆறு கால பூஜை நேரங்களைத் தவிர, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை இல்லை என உத்தரவிட்டிருந்தது.