Payload Logo
சினிமா செய்திகள்

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

Author

manikandan

Date Published

Nayanthara clarified Chandramukhi issue

சென்னை :தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த திருமண வீடியோவானது நெட்ப்ளிக்ஸ் OTT இணையதளத்தில் நயன்தாரா சினிமா வாழ்வு மற்றும் திருமண நிகழ்வு ஆகியவை சேர்ந்து வெளியாகி இருந்தது.

இந்த வீடியோவில் நானும் ரௌடி தான் படத்தில் உள்ள படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக அப்பட தயாரிப்பாளர்  தனுஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், சில தினங்களுக்கு முன்னர் இன்னொரு செய்தி உலா வந்தது.

அதாவது, நயன்தாரா ஆவணப்படத்தில், நயன்தரா தமிழில் ஆரம்ப காலகட்டத்தில் நடித்த ரஜினிகாந்தின் 'சந்திரமுகி' பட காட்சிகள் இடம்பெற்று இருந்ததாகவும் அதனை உரிய அனுமதியின்றி உபயோகப்படுத்தியதாகவும் சந்திரமுகி பட நிறுவனமான சிவாஜி புரொடெக்சன் ரூ.5 கோடி நோட்டீஸ் அனுப்பியதாக இணையத்தில் செய்திகள் உலா வந்தன. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது நயன்தரா தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

அதில், சிவாஜி புரொடெக்சன் தரப்பு , சந்திரமுகி பட காட்சிகளை நயன்தரா ஆவண படத்தில் உபயோகிக்க அனுமதி அளித்ததாக அதில் குறிப்பிடப்பட்டு. சிவாஜி புரெடெக்சன் சார்பாக அவருடைய மூத்த மகன் ராம்குமார் கணேசன் கையெழுத்திட் ஒரு அறிக்கை வெளியாகி இணையத்தில் உலவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.