Payload Logo
தமிழ்நாடு

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

Author

Rohini

Date Published

vijay-prabhakaran

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை கோயம்பேட்டில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசினார். இதில், தனது தந்தையும் கட்சி நிறுவனருமான கேப்டன் விஜயகாந்தை, நடிகர் விஜய்யுடன் ஒப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தினார். “கேப்டன் விஜயகாந்த் வேறு, விஜய் வேறு. கேப்டன் மக்களுக்காக வாழ்ந்தவர், அரசியலில் தனி பாதையை உருவாக்கியவர். அவரை வேறு யாருடனும் ஒப்பிடுவது தவறு,” என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

விஜய பிரபாகரன், தமிழக அரசியலில் தேமுதிகவின் தனித்துவத்தை வலியுறுத்தி, “கேப்டன் விஜயகாந்த், மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுத்தவர். அவரது பயணம், திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து, மக்களுக்கு சேவையாற்றியது. இதை யாருடனும் ஒப்பிட முடியாது,” என்றார். விஜய் குறித்து பேசுகையில் விஜய் அவருடைய நிலைப்பாடுகாக வருகிறார். அவருடைய பலத்தை நம்பி அரசியலுக்கு வருகிறார்” எனவும் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” திமுக அதிமுகவோடு தேமுதிக கூட்டணி வைப்பதற்கு எந்த சங்கடமும் கிடையாது. 2026-ல் கண்டிப்பாக கூட்டணி ஆட்சிதான் அமையும்.  திராவிட சித்தாந்தம் கொண்ட கட்சிகள் தான் கூட்டணி ஆட்சி அமைக்கும்” எனவும் விஜய பிரபாகரன் தெரிவித்தார்.

தேமுதிகவின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசிய விஜய பிரபாகரன், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்வதாகவும், மக்கள் நலனுக்காக கேப்டனின் கொள்கைகளை முன்னெடுப்போம் என்றும் உறுதியளித்தார். இந்தக் கூட்டத்தில், கட்சி நிர்வாகிகள் மத்தியில் கேப்டன் விஜயகாந்தின் பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது அரசியல் பயணத்தை தொடர வேண்டும் எனவும் முடிவு எடுக்கப்பட்டது.