Payload Logo
லைஃப்ஸ்டைல்

கரும்பு சாறில் பொங்கல் செய்யலாமா?. அது எப்படிங்க.?

Author

k palaniammal

Date Published

sugarcane pongal (1)

சென்னை :கரும்புச்சாறை   வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்  காணலாம்.

தேவையான பொருள்கள்:

sugarcane juice (1)

செய்முறை:

அரிசி மற்றும் பருப்பை  கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். கரும்புச்சாறு நான்கு  டம்ளர் குக்கரில் சேர்த்து அதில் ஊற வைத்துள்ள அரிசியையும் சேர்த்து ஒரு விசில் விட்டு பத்து நிமிடம் மிதமான தீயில் வைத்து விட வேண்டும். இடை இடையே கிளற வேண்டும் . மற்றொருபுறம் வெல்லத்தை  பொடித்து  அதில் சிறிதளவு மட்டும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் நெய் ஊற்றி அதில் தேங்காயை  நறுக்கி பொன்னிறமாக வறுத்து அதில் முந்திரி மட்டும் திராட்சையும் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

இப்போது கொதித்துக் கொண்டிருக்கும் கரும்பு சாறு மற்றும் அரிசியில் மீண்டும்  ஒரு டம்ளர் கரும்புச்சாறு சேர்த்து அதனுடன் கரைத்த வெல்ல பாகு மற்றும் வறுத்து வைத்துள்ள தேங்காய் ,முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றையும் சேர்த்து மீண்டும் சிறிதளவு நெய் கலந்து  10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான கரும்பு சாறு சக்கரை பொங்கல் தயாராகிவிடும்.