வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
Author
gowtham
Date Published

சென்னை :கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. இரு படங்களும் காமெடி, காதல் கலந்து ஃபீல் குட் ஜானரில் வெளியாகி இன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இதில் குறிப்பாக, பிரதீப் ரங்கநாதன் - அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் வெளியான 'டிராகன்' படம் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் வெளியான 2 நாள்களில் சுமார் ரூ.25 கோடி வரை உலகளவில் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. படிப்பு எவ்வளவு முக்கியம் என்ற கதையை காதல், காமெடி, செண்டிமெண்ட் கலந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இப்படி இரண்டு படங்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், பிரதீப் நடித்த டிராகன் படம் neek படத்தை விட வசூலில் முந்தியுள்ளது. இருந்தாலும், வார இறுதி நாள்களான இன்றும், நாளையும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிராகன் வசூல் விவரம்
சாக்னில்க் கணிப்பின்படி, டிராகன் படம் முதல் நாளில் (வெள்ளிக்கிழமை) இந்தியாவில் ரூ.6.5 கோடியையும், உலகளவில்ரூ.11 கோடியையும், இரண்டாவது நாளில் (சனிக்கிழமை) இந்தியாவில் மட்டும் ரூ.9 கோடியைத் தாண்டியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் நாளில் உலகம் முழுவதும் ரூ.15.4 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் வசூல் விவரம்
சாக்னில்க் கணிப்பின்படி, 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம், படம் அதன் முதல் நாளில் ரூ.1.15கோடியை ஈட்டியது. இரண்டாம் நாள் வசூலில் ரூ.1.37 கோடி வசூலித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் மொத்த வசூல் இப்போது 2 ஆம் நாள் முடிவில் ரூ. 2.52 கோடியாக உள்ளது.
டிராகன்
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ளது. அனுபமா பரமேஸ்வரன் மற்றும் காயத்ரி லோஹர் ஆகியோர் முக்கிய பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
தனுஷின் மூன்றாவது இயக்கமான இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கட்டூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு மற்றும் பிரசன்னா ஜி.கே. எடிட்டிங் செய்துள்ளார். தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் இப்படம் தாரிக்கப்பட்டுள்ளது.