Payload Logo
தமிழ்நாடு

தவெக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

Author

gowtham

Date Published

Bomb Threat - TVK Vijay

சென்னை :தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மர்ம நபர் மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து, போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்ததில் புரளி என தெரியவந்துள்ளது.

முன்னதாக, இன்று காலை முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதும், பின்னர் சோதனை செய்ததில் அது புரளி என தெரியவந்தும் குறிப்பிடத்தக்கது.