முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.!
Author
gowtham
Date Published

சென்னை :தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சென்னை அழகாபுரத்தில் உள்ள வீட்டிற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மிரட்டல் குறித்து காவல்துறை உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளது.
இன்று அதிகாலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். ஒரு பக்கம், பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை தந்துள்ளார்.
மறுபக்கம் அப்போலோவில் ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டலால் பதறிப்போன போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சென்று வீட்டில் சோதனை செய்ததில் புரளி என தெரியவந்துள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் முதலமைச்சரின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்தது. மிரட்டல் பற்றிய தகவல் கிடைத்தவுடன், சென்னை காவல்துறை உடனடியாக முதலமைச்சரின் இல்லத்திற்கு சென்று விசாரணையை தொடங்கியது.
வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு, வீடு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. தற்போதைய தகவல்களின்படி, இந்த மிரட்டல் ஒரு புரளியாக இருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இருப்பினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிரட்டலையடுத்து, முதலமைச்சரின் இல்லத்தைச் சுற்றிய பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.